தமிழ்நாடு

tamil nadu

என்ன சிலை என்று தெரியாமல் வணங்கிய மக்கள்.. ஆய்வில் வெளிவந்த பொக்கிஷம்!

By

Published : Aug 7, 2023, 1:25 PM IST

என்ன சிலை என்று தெரியாமல் வணங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரில் செய்த ஆய்வில் அவை கி.பி.11ம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலை மற்றும் சூலக்கல் என்று சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கி.பி.11ஆம் நூற்றாண்டு பைரவர் சிலை மற்றும் சூலக்கல் கண்டெடுப்பு
கி.பி.11ஆம் நூற்றாண்டு பைரவர் சிலை மற்றும் சூலக்கல் கண்டெடுப்பு

கி.பி.11ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பைரவர் சிலை மற்றும் சூலக்கல் கண்டெடுப்பு

சிவகங்கை : திருப்பாச்சேத்தியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மழவராயனேந்தலில் வடக்குவாசெல்லி உத்தம நாச்சியம்மன் கோவில் பகுதியில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, செயலர் நரசிம்மன், மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர் சிலை மற்றும் சூலக்கல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் கா.காளிராசா கூறியதாவது: திருப்பாச்சேத்திக்கு வடகிழக்கு பகுதியில் வைகைக் கரையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மழவராயனேந்தல் வடக்கு வாசெல்லி உத்தம நாச்சியம்மன் கோவில் பகுதியில் உள்ள சிலை என்ன சிலை என்று தெரியாமல் வணங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் அச்சிலை பைரவர் சிலை என்றும் அது கி.பி.11 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

பைரவர் சிலையின் வடிவம்:சிவ மூர்த்தங்கள் 64இல் ஒன்றாகப் பைரவர் வடிவமும் உள்ளது. பொதுவாகப் பைரவர் என்றாலே நின்ற கோலத்திலும் சூலம், உடுக்கை, பாசக்கயிறு போன்றவற்றைக் கையில் கொண்டும் நிர்வாணக் கோலத்தில் நாய் வாகனத்தோடும் இருப்பது வழக்கம். ஆனால் இங்குக் காணப்பட்ட பைரவர் இரண்டு கைகள் மட்டுமே உடையதாகவும் ஒரு கை இடுப்பிலும், மற்றொரு கை அருள்பாலித்த வடிவிலும் கழுத்து மற்றும் இடையில் ஆபரணங்களைக் கொண்டும் முகம் மிகவும் தேய்ந்த நிலையிலும் காணப்பட்டது.

இதையும் படிங்க:வைக்கோல் குடோனில் பயங்கர தீ விபத்து; கரும்புகை மண்டலமாக காட்சியளித்த குடியிருப்புகள்!

காளையார் கோவில் சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோவில். முந்தைய காலகட்டத்தில் காளையார் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலப்பகுதி கபாலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகவும், தற்போது சொர்ண காளீஸ்வரர் சொர்ணவல்லி அம்மன் கோவில் என்ற பெயரில் பழைய சிவன் கோவில் ஒன்று இருந்தும் அவை முற்றிலும் அழிவுற்ற நிலையில் அவ்விடத்தில் பழமையான நந்தி சிலை மற்றும் ஆவுடை இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது.

சூலக்கல் வழிபாடு முறைகள்:சிவன் கோவிலுக்குரிய நிலங்களின் எல்லை அளவிடப்பட்டு சூலக்கல் நடப்பட்டிருக்கும். காலப்போக்கில் அவை மக்கள் வழிபடும் கடவுளாகவும் மாறிவிட்டது. வடக்குவாசெல்லி உத்தம நாச்சியம்மன் கோவிலில் சூலக்கல் ஒன்று வழிபாட்டில் உள்ளதாகவும் சிவன் கோவிலுக்கு அளவிட்டு வழங்கப்பட்ட எல்லைக்கல் எங்கிருந்தோ கொண்டு வந்து இங்கு நடப்பட்டு பின்பு வழிபாட்டுக்கு உரியதாக மாறி இருக்கலாம் எனவும் பழமையான சிலை மற்றும் சூலக்கல் அடையாளம் காணப்பட்டதில் சிவகங்கை தொல்நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: மகள்கள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட தாய்.. சென்னையில் நிகழ்ந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details