தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர் சிறையில் உயிரிழப்பு!

சேலம்: போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார்.

போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர் சிறையில் உயிரிழப்பு
போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர் சிறையில் உயிரிழப்பு

By

Published : May 25, 2020, 7:52 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜர் நகர் காலனியைச் சேர்ந்தவர் ராமராஜ் (27). இவர், கடந்த ஜனவரி 1ஆம் தேதி 17 வயது சிறுமியை கடத்தி, திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், காசநோயால் அவதிப்பட்டு வந்த ராமராஜ், மத்திய சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவருக்கு உடல் நிலை மோசமானதால் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் ராமராஜ் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மே 22ஆம் தேதி ஆயுள் தண்டனை கைதி, உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், இன்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதி உடல் நலக்குறைவினால் உயிரிழந்த சம்பவம் சேலம் சிறைக் கைதிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிபிஐ கைது செய்த வங்கி மேலாளர்: சட்டவிரோதமாகப் பார்த்து சென்ற மின்சார அலுவலர்

ABOUT THE AUTHOR

...view details