தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் புத்தாடை வாங்க அலை மோதிய கூட்டம் - போக்குவரத்து பாதிப்பு

தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் குவிந்ததால் சேலம் மாநகரத்தில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்த மக்கள்
புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்த மக்கள்

By

Published : Oct 23, 2022, 8:03 AM IST

சேலம்: தீபாவளி பண்டிகை நாளை (அக். 24) கொண்டாப்பட உள்ளது. இதனையொட்டி சேலம் மாநகரில் உள்ள பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கடைவீதி, நான்கு ரோடு, ஐந்து ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூட்டம் குவிந்துவருகிறது. அந்த பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

குறிப்பாக சிறிய அளவிலான ஜவுளிக்கடைகள் முதல் பெரிய அளவிலான ஜவுளிக்கடைகள் வரை கூட்டம் அள்ளுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் குவிந்ததால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. பேருந்துகள் மாற்றுப் பாதையில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

புதிய பேருந்து நிலையம், 5 ரோடு, பழைய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உயர் கோபுரம் அமைத்தும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்ட நெரிசலில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 12 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே நேரத்தில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்ததால் பழைய பேருந்து நிலையத்திலிருந்து குகை வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அணிவகுத்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீபாவளி விடுமுறை... ரூ.600 கோடி மது விற்பனைக்கு இலக்கு...

ABOUT THE AUTHOR

...view details