தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2019, 1:27 PM IST

ETV Bharat / state

வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தருவதுதான் எங்களது லட்சியம்: முதலமைச்சர் பழனிசாமி

சேலம்: வீடு இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் வீடு கட்டித் தருவதுதான் தங்களது லட்சியம் என சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

tn cm

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத் தொடக்க விழாவும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டார்.

சேலத்தில் முதலமைச்சர் உரை

அதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதன் முக்கிய அம்சங்கள்:

  • வேளாண் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இந்தப் பணி முடிந்ததும் ஒரு குடும்பத்துக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.
  • கால்நடை பூங்கா ஒன்று உலகத்தரத்தில் தலைவாசல் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. கால்நடை பூங்கா அமைந்த பிறகு தலைவாசல், கெங்கவல்லி பகுதி அபரிமிதமான வளர்ச்சியடையும்.
  • புதிதாக ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
  • பாரதப் பிரதமரின் வீடு கட்ட திட்டத்தின்கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதுதான் எங்கள் லட்சியம்.
  • தமிழ்நாட்டில் குடிசைகள் இல்லாத பகுதியாக மாற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details