தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய மாநில அரசுகள் நதிகளை இணைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

சேலம்: காவிரி, கோதாவரி நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

farmers
farmers

By

Published : Jan 20, 2020, 7:48 AM IST

சேலத்தில் ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ் ஏ சின்னசாமி, "மத்திய அரசு தேசிய வங்கிகளில் விவசாயிகள் நகைக் கடன் பெறுவதற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்துள்ளது. இதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. மீண்டும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்க முன்வரவேண்டும்.

அதேபோன்று, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். கூட்டுறவு கடன்களை முழுமையாக ரத்து செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்குறுதி அளித்தபடி காவிரி, கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

மாநில அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

தமிழ்நாடு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி கோயம்புத்தூரில் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் மூலம் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details