சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி இணைந்து சென்னையில் அனைத்து இடங்களிலும் சைக்கிள் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் ஏற்கெனவே கிட்டத்தட்ட 1000 சாதாரண சைக்கிள்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது கூடுதலாக 1000 சைக்கிள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதில் செயின் அற்ற, பஞ்சர் ஆகாத நியூ ஜெனரேஷன் சைக்கிகள் 500 மற்றும் இ-சைக்கிள்கள் 500.
முதல்கட்டமாக சோதனைக்காக சென்னையில் மெரினா கடற்கரை, நந்தப்பக்கம் மெட்ரோ, நாகேஸ்வரா பூங்கா உள்ளிட்ட 10 இடங்களில் 32 நியூ ஜெனரேஷன் சைக்கிகள், 32 இ-சைக்கிள்கள் 22ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.