தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் கிடந்த பூசணிக்காய்களை அகற்றிய இளைஞர்கள் - பொதுமக்கள் பாராட்டு

சேலம்:ஆயுத பூஜைக்காக சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய்களை இரவோடு இரவாக அகற்றிய இளைஞர்களுக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

sevagan trust

By

Published : Oct 9, 2019, 11:26 PM IST

தமிழ்நாட்டில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பூஜையின் ஓர் அங்கமாக பொதுமக்கள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பூஜை முடிந்து தெருக்களில் பூசணிக்காயை உடைப்பார்கள்.

இந்தச்சூழலில் நேற்று சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மக்கள் பூஜை முடித்து பூசணிக்காய்களை உடைத்துப்போட்டிருந்தனர். இதனால் சேலம் சாலைகளில் எங்கு பார்த்தாலும் பூசணிக்காய்களாக இருந்தது.

இவ்வாறு சாலைகளில் கிடந்த பூசணிக்காய்களால் விபத்துகள் ஏற்படும் என்று கருதி பொதுநல நோக்குடன் அதனை அகற்றும் பணியில் சேவகன் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர்.

சாலையில் கிடந்த பூசணிக்காய்களை அகற்றிய இளைஞர்கள்

நேற்று மாலை ஆறு மணிக்கு தொடங்கிய இந்த பணி நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இதில் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகளில் உடைக்கப்பட்டிருந்த பூசணிக்காய்கள் அகற்றப்பட்டது.

விபத்துகள் ஏற்படாத வகையில் பூசணிக்காயை அகற்றிய இளைஞர்களின் சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க:பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் தேவை - பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details