தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக காய்கறி விலை உயர்ந்துள்ளது, மேலும் கத்திரிக்காய் கிலோ ரூ.44 வரையிலும் உருளைக்கிழங்கு கிலோ ரூ.56 வரையிலும் விற்கப்படுகிறது.
இந்நிலையில் தக்காளி கிலோ 22 ரூபாயும், சின்ன வெங்காயம் கிலோ 46-50 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் 50 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
விலை உயர்ந்த நிலையிலும் காய்கறி வரத்து அதிகமில்லாத காரணத்தினால் வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு இல்லாத சூழ்நிலையே உள்ளது.
விலை நிலவரம்
- கத்திரிக்காய் - 44
- வெண்டைக்காய் - 14
- அவரை - 44
- கொத்தவரை - 24
- முள்ளங்கி - 16
- மொச்சை - 46
- பூண்டு - 100 முதல் 150
சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும், தனியார் சந்தைகளான வஉசி சந்தை போன்ற இடங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.