கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூடும்படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
கரோனா: சேலத்தில் வணிக வளாகங்கள், நகைக்கடைகள் மூடல்
சேலம்: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக வணிக வளாகங்கள் நகைக்கடைகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளV.
salem
இந்நிலையில், சேலத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு துணிக்கடை ஊழியர்கள் அவசர அவசரமாக வாடிக்கையாளர்களை வெளியேற்றி கடைகளை மூடினார்கள். இதைப் போல், நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் எனப் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்களை வணிகர்கள் வைரஸ் தடுக்கும்வகையில் தானாக முன்வந்து நிறுவனங்களை மூடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவிட்-19 அறிகுறியுடன் வந்த ஒடிசா இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!