தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செப்டிக் டேங்க் இடிந்து விழுந்ததில் வாகனங்கள் மூழ்கின!

சேலம்: வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செப்டிக் டேங்க் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனங்கள் மூழ்கியதால் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

drainage
drainage

By

Published : Sep 29, 2020, 8:41 AM IST

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்பு உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த குடியிருப்பு தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள செப்டிக் டேங்க் இடிந்து விழுந்துள்ளது, இதனால் செப்டிக் டேங்க் மீது நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.

செப்டிக் டேங்க் இடிந்து விழுந்த பகுதி
மேலும் உடைப்பின் காரணமாக, மேலே வந்த கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் மிகுந்த துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து, குடியிருப்புவாசிகள் அளித்த தகவலின் அடிப்படையில், சேலம் மாநகராட்சி ஊழியர்கள் செப்டிக் டேங்கிலிருந்து தண்ணீரை வெளியேற்றி உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் செப்டிக் டேங்க் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு வாசிகள்

இதையும் படிங்க:சென்னையில் தொய்வின்றி நடக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி

ABOUT THE AUTHOR

...view details