கரோனோ வைரஸ் நோய்த்தொற்று பொதுமக்களிடையே பரவி விடாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளன. தடை உத்தரவால் சேலத்தில் உள்ள உணவுக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இதனால் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பசியால் தவிக்கும் தெரு நாய்களுக்கு, சேலம் மாநகராட்சி சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாய்களுக்கு உணவு வழங்கும் வாகனங்களை இன்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தெருநாய்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள சேலம் மாநகராட்சி இன்று முதல் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி மாநகராட்சிப் பகுதியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நான்கு வாகனங்களிலும் பன், பிரெட் ஆகிய உணவுப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு தெருக்களில் திரியும் நாய்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் மூலம் உணவு வழங்கப்படும்.