தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2020, 11:35 PM IST

ETV Bharat / state

பேருந்து மூலம் ராஜஸ்தான் சென்ற தொழிலாளர்கள்

சேலம்: வடமாநிலத்தைச் சேர்ந்த 30 தொழிலாளர்கள், அரசு அனுமதியுடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

bus
bus

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடெங்கும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு வேலைகள் நிமித்தமாக தங்கி இருந்தனர்.

மேலும், ஊரடங்கு உத்தரவினால் எந்த ஒரு வேலையும் இன்றி , அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வந்தனர். இதனையடுத்து ராஜஸ்தான் தொழிலாளர்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கடிதம் பெற்று, இன்று பேருந்து மூலம் 30 தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்து மூலம் ராஜஸ்தான் சென்ற தொழிலாளர்கள்

அவர்களை சக தொழிலாளர்கள், அப்பகுதி வாசிகள் வழியனுப்பி வைத்தனர். பேருந்தில் 30 நபர்கள் மட்டும் அமர்ந்து தகுந்த இடைவெளி கடைப்பிடித்து கவசம் அணிந்து தங்களின் சொந்த ஊருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details