தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி செவிலியர் போராட்டம்!

சேலம்: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, தொடர்ந்து 6ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

By

Published : May 31, 2020, 3:59 PM IST

Nurses struggle to insist on periodic pay
Nurses struggle to insist on periodic pay

தமிழ்நாடு அரசால், மருத்துவப் பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் செவிலியர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தங்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியம், தமிழ் நாட்டிலுள்ள ஒப்பந்த செவிலியர்கள், கடந்த ஆறு நாள்களாக கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து வருகின்றனர்.

Nurses struggle to insist on periodic pay

இதுகுறித்து தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாகி மேரி கூறுகையில்," தமிழ்நாடு அரசு இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதற்கு அரசு செவிசாய்க்காவிட்டால் மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

Nurses struggle to insist on periodic pay

செவிலியர்களின் இந்தத் தன்னலமற்ற சேவையை கருத்தில் கொண்டு, எங்களது வாழ்வாதாரம் மேம்பட காலமுறை ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details