தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிசான் திட்ட முறைகேட்டில் திடீர் திருப்பம்: தமிழ்நாட்டுப் பயனாளிகள் பட்டியலில் வடமாநிலத்தவர்கள்!

சேலம்: விவசாயி அல்லாத 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு மோசடி நடந்திருப்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

kissan scheame  சேலம் மாவட்டச் செய்திகள்  கிசான் திட்ட மோசடி  tamilnadu kissan scheame cheating
கிசான் திட்டத்தில் முறைகேடு: தமிழ்நாட்டுப் பயனாளிகள் பட்டியலில் வடமாநிலத்தவர்கள்

By

Published : Sep 27, 2020, 10:21 PM IST

சேலத்தில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயி அல்லோதோர் பிரதமர் கிசான் நிதியுதவித் தொகை திட்டத்தில் பணம் பெற்று சுமார் 6 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3.15 கோடி ரூபாய் அளவிலான பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மீதிப்பணத்தை திரும்பப் பெற அலுவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டுப் பயனாளிகள் பட்டியலில் ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டில் விவசாயிகள் என்ற பெயரில் கிசான் திட்டத்தில் இரண்டு தவணைகளாக ரூ. 4 ஆயிரம் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலியாகச் சேர்க்கப்பட்டு கிசான் உதவித்தொகை பெற்றுள்ளது தற்போது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமாநிலத்தவரிடம் இருந்து முறைகேடாக பெறப்பட்ட உதவித்தொகை திரும்ப வசூலிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

மேலும், இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட வேளாண் உதசவி வட்டார அலுவலர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிக ஊழியர்கள் ஆறு பேர் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கிசான் திட்ட மோசடி: 12 வேளாண்மை அலுவலர்கள் இடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details