சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
வரி உயர்வு இல்லாமல் நகராட்சி செயல்படாது:அதில், “தமிழ்நாட்டில் 83 விழுக்காடு மக்களுக்கு 25 முதல் 50 விழுக்காடு மட்டுமே சொத்துவரி உயர்ந்துள்ளது. 17 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே கூடுதலாக சொத்துவரி உயர்ந்துள்ளது. இதில் வியாபாரப் பகுதி, தொழிற்சாலை கட்டடங்கள், அதற்கு மட்டும் தான் 100 முதல் 150 விழுக்காடு வரை வரி உயர்ந்துள்ளது. அதில் 1.7 விழுக்காடு பேருக்கு மட்டும்தான் 200% வரை வரி உயர்ந்துள்ளது.
’விமர்சனம் செய்வதற்கே பாஜகவின் தலைவராக அண்ணாமலை இருக்கிறார்’ - கே.என்.நேரு வரி உயர்வு இல்லாமல் ஒவ்வொரு நகராட்சியும் அன்றாட பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாது. இது தொடர்பாக ஊராட்சி, நகராட்சி தலைவர்கள் வந்தவர்கள் மற்றும் மக்கள் எதுவும் சொல்லவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே வரி ஏறிவிட்டது என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் 15 மாநிலங்களில் வரி உயர்ந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் சொத்து வரி உயர்ந்துள்ளது.
அவர்களும் வரி உயர்வு வரக்கூடாது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் அரசியல் செய்வதற்காக சொல்லி வருகிறார்கள். மக்களின் வளர்ச்சித் திட்டங்களை நோக்கி, சென்று கொண்டுள்ளதால் மக்களுக்கு எந்த சிரமமும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் பற்றி எல்லாம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதுவும் கூறவில்லை. இந்த சொத்து வரியைப் பற்றி மட்டும் கேட்கிறார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை ராமஜெயம் கொலை வழக்கு:விமர்சனம் செய்வதற்காகவே பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவை பெருமையாகப் பேசினால் எப்படி அவர் பாஜகவில் தலைவராக இருக்க முடியும். பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதை திமுக எதிர்கொண்டு வருகிறது. மக்களின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் எதிர்கொண்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கொலை வழக்கு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் உண்மை நிலவரம் எங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியவரும் என்ற முழு நம்பிக்கை உள்ளது” எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது; தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை