தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதிமுறைகள் மீறல்: சேலத்தில் கடைகளுக்குச் சீல்வைப்பு!

சேலம்: விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட இறைச்சிக் கடைகள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல்வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

சேலத்தில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட இறைச்சி கடைகளுக்கு சீல்!
சேலத்தில் விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட இறைச்சி கடைகளுக்கு சீல்!

By

Published : May 16, 2020, 4:06 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 50 நாள்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலத்தில் அத்தியாவசிய மளிகைக் கடைகளைத் தவிர மற்ற கடைகள் மே 17ஆம் தேதிவரை திறக்க அனுமதி இல்லை எனச் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சேலம் மாநகரப் பகுதிகளில் ஆட்சியர் உத்தரவை மீறி பழைய பேருந்து நிலையம், அருணாசல ஆசாரி தெரு உள்ளிட்ட பகுதிகளில் துணிக்கடைகள், டயர் கடைகள், மின்மோட்டார் கடைகள் என 10-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுவந்தது.

தகவலறிந்து அப்பகுதிக்குச் சென்ற மாநகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் திறக்கப்பட்ட அனைத்துக் கடைகளையும் மூடி சீல்வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

அதேபோல் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அனுமதியின்றி ஆட்டிறைச்சிக் கடைகள் செயல்பட்டுவந்தன‌. இதை அறிந்த சேலம் மாநகராட்சி அலுவலர்கள் அந்தக் கடைகளுக்கும் சீல்வைத்து அபராதம் விதித்தனர்.

இதையும் படிங்க:23ஆம் புலிகேசியின் அரசியல் வடிவம் ஸ்டாலின்' - அமைச்சர் கிண்டல்

ABOUT THE AUTHOR

...view details