தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம்!

சேலம்: சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் அவரின் ஆதரவாளர்கள், உறவினர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு ராமமூர்த்தி நகரில் தகனம் செய்யப்பட்டது.

சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம்!

By

Published : Nov 15, 2019, 2:11 PM IST

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசகம். இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மாவோயிஸ்ட் அமைப்பில் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் அவர் கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் கடந்த மாதம் 29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் . பின்னர் அவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. மணிவாசகத்தின் மரணம் குறித்து அவரின் தங்கை லட்சுமிக்கும் அவரின் கணவருக்கு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவரும் திருச்சூர் சென்று மணிவாசகத்தின் உடலை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள மறுத்தனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தார். இதனால் 15 நாட்களாக மணிவாசகரின் உடல் தகனம் செய்யப்படாமல் இருந்தது . இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த உத்தரவின் பேரில் மணிவாசகத்தின் உடல் அவரின் தங்கை லட்சுமியிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டது.

மணிவாசகம் ஆதரவாளர்கள், உறவினர்கள் அஞ்சலி

பின்னர், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் நேற்று முன்தினம் , திருச்சூரிலிருந்து சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. மணிவாசகத்தின் மனைவி கலா, மற்றொரு தங்கை சந்திரா ஆகியோர் திருச்சி சிறையிலிருந்து இறுதி சடங்கிற்காக பரோலில் வந்தனர்.

சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம்!

இதனையடுத்து மணிவாசகத்தின் சொந்த ஊரான தீவட்டிப்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகர் கிராமத்தில் ஆதரவாளர், உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க...கேரளாவில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க பெல்!

ABOUT THE AUTHOR

...view details