சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் அடுத்துள்ள காட்டூர் குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சினேகா. இவர்,தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அவரது பக்கத்து ஊரான வெள்ளியம்பட்டி குப்பனூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். அதே பகுதியில் செல்போன் பழுதுநீக்கும் கடை நடத்திவருகிறார். கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே சினேகாவிற்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!
சேலம்: தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தது.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்ஜோடி!
மணமகன் வீட்டார் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துவந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சினேகா தனது வீட்டை விட்டு வெளியேறி சேலம் ஊத்துமலை முருகன் கோயிலுக்கு சென்று அரவிந்த்தை திருமணம் செய்து கொண்டார்.
இந்த விவகாரம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரிந்ததால், தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காதல் ஜோடி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தது.