சேலம் அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகள் நல வாழ்வு, தாய் சேய் பிரிவு, பிணவறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் புற நோயாளிகளிடம் மருத்துவமனையின் சிகிச்சைகள் குறித்தும் அவர்களுக்கான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
20 கோடி ரூபாய் செலவில் புற்றுநோயை குணமாக்கும் கருவிகள்! - அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
சேலம்: 20 கோடி ரூபாய் செலவில் புற்றுநோயை குணமாக்கும் கருவிகள் சேலம் அரசு மருத்துவமனையில் நிறுவப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவிஜயபாஸ்கர், “ஆய்வு மேற்கொண்டதில் தாய் சேய் நல மருத்துவப் பிரிவில் நல்ல முறையில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிநவீன சிகிச்சை அளிக்கக் கூடிய புற்றுநோய் கண்டறியும் கருவியும், அதனைக் குணப்படுத்தும் கருவியும் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிக்க உதவி செய்யப்படும். கொரோனா நோய் கிருமி குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய் கிருமிக்கு 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது வேதனைக்குரிய விஷயம் தான். ஆனால் போதுமான அளவில் மருந்துகள் தமிழ்நாட்டில் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
TAGGED:
விஜயபாஸ்கர் ஆய்வு