சேலம்:உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுவருகிறது.
சேலத்திலிருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டுமுறை மண்சரிவு ஏற்பட்டது.
நேற்றிரவு (நவம்பர் 12) சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் 40 அடி பாலம் அருகே சுமார் 200 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. சரிந்து விழுந்த பாறையை அகற்றும் பணியில் அதிகாலை முதல் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.