தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜருகுமலை கிராமத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்தபடி சென்ற அலுவலர்கள்!

சேலம்: ஜருகுமலைக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் கொண்டு சென்றபோது, அங்கு செல்ல முறையான பாதை இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, பின்பு அலுவலர்களே வாக்குப்பதிவு இயந்திரங்களை கைகளில் எடுத்துக் கொண்டு சென்றனர்.

-evm-machine-near-salem

By

Published : Apr 17, 2019, 10:31 PM IST

தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிளுக்கு இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதில் சேலம் அருகே உள்ள ஜருகுமலையில் மேலூர்,கீழூர் என்ற இரண்டு மலைக் கிராமங்கள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 675 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது இந்த மலைப்பாதைக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த மலைப்பாதை செல்ல தற்போது 4 கிலோ மீட்டர் தூரம் வரை பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த மலைப்பாதை கரடு முரடாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்தபடி சென்ற அலுவலர்கள்

இந்த நிலையில் ஜருகுமலையில் வாக்குப்பதிவு செய்யும் மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் மற்றும் தேர்தலுக்குத் தேவையான பொருட்களை சுமந்து கொண்டு வேன் ஒன்றில் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் ஜருகுகுமலைக்கு புறப்பட்டு வந்தனர்.

பாதி வழியில் வேன் ஏறுவதற்கு பாதை இல்லாத காரணத்தினால் தேர்தல் அலுவலர்களும், ஊழியர்களும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை கீழே இறக்கினர்.

மேலும், ஜருகுமலை கிராமத்திற்கு செல்வதற்கு பாதை இல்லாத காரணத்தினால் அலுவலர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மலைப்பகுதியில் ஏற முடியாமல் தவித்தனர். பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தேர்தல் அலுவலர்களும், ஊழியர்களும் கைகளில் சுமந்து நடந்தபடியே மலைப்பாதையில் ஏறி ஜருகுமலைக்குச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details