மனுதர்ம நூலை தடைசெய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்டத் துணைச்செயலாளர் காயத்ரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது மனுதர்ம நூலில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ள செய்திகளை கொளத்தூர் மணி படித்துக் காண்பித்து விளக்கமாக உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு கொளத்தூர் மணி அளித்த பேட்டியில், "மனுதர்ம சாஸ்திரம் குறித்து திருமாவளவன் பேசிவிட்டார் என்பதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் மனுதர்ம நூலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியவர்கள் முதலில் பிராமணர்கள்தான். மனுதர்ம நூலில் உண்மையிலேயே பெண்களை இழிவுபடுத்தும் வகையில் புராணக்கதைகள் இடம்பெற்றுள்ளன.