தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

29 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தை கைப்பற்றிய திமுக!

சேலம்: சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்ஆர் பார்த்திபன் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 804 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

29 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தை கைப்பற்றும் திமுக

By

Published : May 23, 2019, 9:01 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்ஆர் பார்த்திபன் தனக்கு பின் வந்த அதிமுகவின் கேஆர்எஸ் சரவணனை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 804 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு சேலம் மக்களவைத் தொகுதியை திமுக கைப்பற்றியது.

சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பார்த்திபன், கல்லூரி படிப்பை முடித்த பிறகு வீரவன்னியர் பேரவையில் இருந்தார். பின்னர் தேமுதிகவில் இணைந்து அதிமுக கூட்டணியில் 2011இல் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2016ஆம் தேதி தேமுதிகவில் இருந்து விலகிய திமுகவில் இணைந்தார்.

ABOUT THE AUTHOR

...view details