தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் மீது தவறான புகார்: திமுக எம்.பி., எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சேலம்: முதலமைச்சர் மீது தவறான புகார் அளித்த திமுக எம்.பி., எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவர் மோகன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் மோகன்
சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் மோகன்

By

Published : Apr 20, 2020, 9:26 AM IST

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கரோனா வைரஸ் பெருந்தொற்று முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் நடைபெற்றது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தவறு என்றும், எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேலம் மாநகர காவல் துறையிலும், ஆட்சியர் அலுவலகத்திலும், திமுக எம்.பி. பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் புகார் மனு அளித்திருந்தனர்.

இதற்கு அதிமுக தரப்பிலிருந்து பதிலடி தரும்வகையில், சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலத் தலைவர் மோகன் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், "கரோனோ கொடிய நோய் தடுப்புப் பணியில் இரவு பகல் பாராமல் தன்னலம் கருதாமல், பொதுமக்களின் நலன்கருதி செயல்பட்டுவரும் முதலமைச்சர் மீதும், அனைத்துத் துறை அலுவலர்கள் மீதும் மோசடியான புகாரை திமுக எம்.பி., எம்எல்ஏ அளித்திருப்பது வேதனைப்படுத்துகிறது.

சட்டத்தின் தன்மைகள் குறித்து தெரியாமல் இருவரையும் குறித்து வேடிக்கையாக இருக்கிறது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மோகன் அளித்த பேட்டியில், "திமுக எம்.பி., எம்எல்ஏ புகார் அளித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் சட்டப்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details