தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 10, 2019, 5:24 PM IST

ETV Bharat / state

‘அயோத்தியில் மசூதியையும், ராமர் கோயிலையும் அரசே கட்டித்தர வேண்டும்’ - தங்கபாலு கோரிக்கை

சேலம்: அயோத்தியில் மசூதியையும், ராமர் கோயிலையும் அரசே கட்டித்தர வேண்டுமென கே.வி. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.

kv thangabalu

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி. தங்கபாலு சந்தித்து, முதலமைச்சரின் மாமனார் இறப்புக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அயோத்தி வழக்கு தீர்ப்பை வரவேற்கிறேன்

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பினை வரவேற்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கக் கூடிய வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்தியாவில் அமைதி நிலவவேண்டும் நல்லிணக்கம் வளர வேண்டும் என்பதற்காக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனை காங்கிரஸ் கட்சியும் வரவேற்கிறது. அயோத்தியில் ராமர்கோயிலையும், மசூதியையும் அரசே கட்டிக் கொடுத்து மக்களை திருப்திபடுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details