வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. செல்லப் பிராணிகளான நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், மீன்கள் கன நேரத்தில் எவ்வளவு பெரிய மன உளைச்சலையும் சரி செய்துவிடும் என்பது மனநல ஆய்வாளர்களின் கருத்து.
சேலம் மாவட்ட சாலையோரங்களில் மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் மீன் குடுவைக்குள் கடல்பாசி, கூலாங்கற்கள் என அலங்காரப் பொருட்கள் பலவும் நிரப்பப்பட்டு கோல்டன் மீன், கப்பிஸ் என பல ரகங்களில் வண்ண மீன்கள் வெளிமாநிலத்தினரால் விற்கப்படுகின்றன.