சேலம் அருகே உள்ள முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சுரேஷ் மற்றும் அவரது தாயார் ஆகியோர் வரதச்சணை கேட்டு செல்வியை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை - ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் !
சேலம்: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து, உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை செல்வி மர்மமான முறையில் வீட்டில் இறந்துள்ளார். இவரது சடலத்தை மீட்ட போலீசார், உடற்கூறாய்வு மேற்கொள்ள சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த செல்வியின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். பிறகு செல்வியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறிய உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
இதனையறிந்த உதவி ஆணையர் ஈஸ்வரன், ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்வியின் உறவினர்களை சமாதானம் செய்தனர். வரதட்சனை கொடுமையால் தான் செல்வி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். எனவே,செல்வியின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என செல்வியின் உறவினர்கள் தெரிவித்தனர்.