தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 10, 2021, 12:02 AM IST

ETV Bharat / state

”கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினால் முழு ஊரடங்கு  தேவை இருக்காது” - முதலமைச்சர் பழனிசாமி!

சேலம் : அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை அனைவரும் பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது, தொற்றின் வேகம் அதிகரித்தால் மருத்துவ நிபுணர்களைக் கலந்து ஆலோசித்தப் பின்னரே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

cm edapadi palanisamy bite at salem gh
cm edapadi palanisamy bite at salem gh

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.9) சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொற்று பாதித்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 95.31 விழுக்காடு நபர்கள் தற்போது குணமடைந்துள்ளனர் .

தமிழ்நாட்டிற்கு இதுவரை 54 லட்சத்து 85 ஆயிரத்து 760 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில், இதுவரை 34 லட்சத்து 87 ஆயிரத்து 36 பேர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர். சேலத்தில் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 461 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மாநில அளவில் தற்போது சுமார் 20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறன. அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா சிகிச்சை மருந்துகள், உபகரணங்கள், முகக்கவசம் போதுமான அளவு இருப்பு உள்ளது .

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதலமைச்சர்
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை, வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். தற்போது தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அரசு சார்பிலும் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது. தொற்றின் வேகம் அதிகரித்தால் மருத்துவ நிபுணர்களின் அறிவுரை படி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் " எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details