சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள ரங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணா. இவர் தன்னுடைய கால்நடைகளின் தீவனத் தேவைகளுக்காக, சோளத்தட்டை கட்டுகளை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராமல் அந்த சோளதட்டில் தீப்பிடித்து மளமளவென்று எரியத் தொடங்கியது. அருகாமையில் செங்கல் சூளை இருப்பதால் அங்கிருந்தவர்கள் செங்கல் வேகவைக்க தீமூட்டி இருப்பார்கள் என நினைத்துள்ளனர்.
தீ விபத்தில் எரிந்து நாசமான மாட்டுத் தீவனம் - கண்ணீர் வடிக்கும் விவசாயி
சேலம்: ஓமலூர் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாட்டுத் தீவனத் தட்டை எரிந்து நாசமானது.
salem
சம்பவ இடத்திற்கு வந்த விவசாயி கிருஷ்ணா, கால்நடைக்காக வைத்திருந்த தீவனம் எரிவதை கண்டு, உடனடியாக ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவலளித்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான சோளத்தட்டுக்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக விவசாயி கிருஷ்ணா வேதனையுடன் தெரிவித்தார்.