தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் தொல்லை வழக்கு; குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!

சேலம் : சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமி பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
சிறுமி பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

By

Published : Mar 26, 2021, 6:33 PM IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வடக்கு காட்டைச் சேர்ந்தவர் அய்யனார் (40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கின் இறுதி அறிக்கை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் நீதிபதி முருகானந்தத்திடம் தாக்கல்செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச் 26) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: இரண்டாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்த இங்கிலாந்து

ABOUT THE AUTHOR

...view details