இந்நிலையில் ஏடிஎம் திருட்டு தொடர்பாக பொன்னார் என்ற இளைஞரை கைது செய்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உணவகம் ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்தவந்த இவரை உணவக நிர்வாகம் திடீரென்று பணியைவிட்டு நீக்கியது.
ஏடிஎம் மையங்களில் தொடர் திருட்டு - இளைஞர் கைது
சேலம்: ஏடிஎம் மையங்களில் மின்கலம் (பேட்டரி) திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏடிஎம் திருட்டு
சேலத்தில பல்வேறு இடங்களில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களிலிருந்த மின்கலன்கள் திருடுபோனது. இதையறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடப்பட்டுவந்தனர்.
இதனால் பணத்திற்கு மிகவும் சிரமப்பட்டுவந்த பொன்னார் ஏடிஎம் மையங்களில் உள்ள மின்கலன்களை திருடி அதை பழைய இரும்புக் கடைகளில் குறைந்த விலைக்கு விற்றுவந்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு பழைய இரும்புக் கடையில் விற்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 மின்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பொன்னார் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.