கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கத்தில் நகைக்கடை உரிமையாளர் குன் குமணன் ராம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர், அவரிடம் ரூ.40 லட்சம் பறித்துக் கொண்டு கடத்தல்காரர்கள் அவரை மிரட்டி அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
நகைக்கடை உரிமையாளர் கடத்தல் வழக்கு; இருவர் நீதிமன்றத்தில் சரண்!
சேலம்: கெலமங்கத்தில் நகைக்கடை உரிமையாளரைக் கடத்தி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
2 பேர் சரண்
ராயக்கோட்டை ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில் காவலர்கள் விசாரித்து, இது தொடர்பாக நாகராஜ், மாதேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களைத் தவிர கெலமங்கலம்த்தைச் சேர்ந்த பிரபாகரன், கிருஷ்ணப்பா ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் வலைவீசித் தேடி வந்தனர்.
இந்நிலையில், பிரபாகரன், கிருஷ்ணப்பா ஆகியோர் இன்று மஜிஸ்ட்ரேட் சிவா முன்னிலையில் சரணடைந்தார். இவர்கள் இருவருக்கும் வரும் 12-ஆம் தேதி வரை சேலம் மத்தியச் சிறையில் அடைக்க மாஜிஸ்ட்திரேட் உத்தரவிட்டார்.