சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில், 20 ஊராட்சி ஒன்றியங்கள், 385 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 4,299 ஊரக ஊராட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாகத் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக டிசம்பர் 27ஆம் தேதியும் மீதமுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது.
உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட 17,216 பேர் வேட்பு மனுத் தாக்கல் வேட்புமனு தொடங்கிய நாள் முதல் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மட்டும் 8219 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 254 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 2,045 பேர், கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,502 பேர், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 12,415 பேர் என மொத்தம் 17ஆயிரத்து 216 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமியை பிரம்பால் அடித்த திருநங்கை மதுராவிற்கு மிரட்டல் - பாதுகாப்புகோரி ஆட்சியரிடம் மனு!