நிழலில்லா நாள் என்பது வருடத்திற்கு இருமுறை நிகழக் கூடியது. அதாவது சூரியனின் வடக்கு நகர்வு, தெற்கு நகர்வு நாட்களில் இச்சம்பவம் நிகழும். சூரியன் செங்குத்தாக ஒரு பொருள் மீது விழும் பொழுது நிழல் பூஜ்யமாக மாறுகிறது. இது நிழலில்லாத நாளாக கருதப்படுகிறது.
அரசு பள்ளியில் நிழல் இல்லாத நாள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்
ராமநாதபுரம்: அரசு பள்ளியில் வருடத்திற்கு இருமுறை நிகழக் கூடிய நிழல் இல்லாத நாள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கினர்.
இது அந்தந்த பகுதியின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப அமையும். இந்நிலையில் தென் கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் நிகழ்வுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் வருடத்திற்கு இரண்டு முறை நிகழக் கூடிய இந்த நிழல் இல்லாத நாள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறுகின்றனர்.
அதன்படி, இன்று ராமநாதபுரத்தில் சரியாக நண்பகல்12 மணி 14 நிமிடங்கள் முதல் 12 மணி 20 நிமிடம் வரையில் நிழலில்லா நேரம், அப்போது பள்ளியின் முன்புரத்தில் அதை எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக செவ்வகம், சதுரம் உருளைகள் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டன. மாணவர்கள் வட்டமிட்டு நின்று நிழல் செங்குத்தாக மாறியதை கண்டனர். நிழலில்லா நாள் குறித்து ராஜாமணி என்ற மாணவர் சக மாணவர்களுக்கு விளக்கினார்.