ராமநாதபுரம் சட்டக் கல்லூரியில் படித்த கோமளா என்பவர், தன்னுடன் படித்த சதீஷ் குமார் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இந்தத் தம்பதிக்கு மூன்று மாத கைக்குழந்தை உள்ளது.
சதீஷ்குமார், கோமளாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டும், கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியும் கொடுமைப்படுத்தி அவரை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
மனைவி தாய் வீட்டுக்கு சென்றதையடுத்து, சதீஷ்குமார் வேறு இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
கைக்குழந்தையுடன் மனைவியை விரட்டிய கணவர் இந்நிலையில், தன்னை தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேறு இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்ட சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோமளா தனது தாயாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, அவரிடம் விசாரித்து கோரிக்கை மனுவை அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இளம்பெண் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:வைரல் வீடியோ: உறவினரை பால்கனியில் இருந்து தள்ளிவிட முயன்ற இருவர்!