இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மரகத நடராஜரின் ஆருத்ரா தரிசனம் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வழக்கம்போல் அனைத்து அர்ச்சகர்களும் இன்று சந்தனக்காப்பைக் கலைத்து 33 வகையான அபிஷேகங்களை செய்வது வழக்கம். ஆனால், இன்று அறநிலையத்துறையின் இணை ஆணையர் தனபாலன் பாரம்பரிய குழுக்கள் அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டார்.
வழக்கமாக அவர்கள் இப்படித்தான் பூஜை செய்வோம் என்று கூறிய நிலையிலும் காவல் துறையினரை வைத்து அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வு அவமானகரமானதாக இருந்ததாகக் கூறிய அர்ச்சகர்கள், அனைவரும் கோயிலை விட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும், விஐபிக்களை கோயிலின் கருவறைக்கு முன்பாக அமர வைத்து நான்கு மணி நேரம் பூஜையும் நடைபெற்றது.