தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா உறுதி!

ராமநாதபுரம்: கரோனா தொற்றுக்கு இரண்டு பேர் ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது மேலும் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : Apr 14, 2020, 11:16 AM IST

ராமநாதபுத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா உறுதி
ராமநாதபுத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா உறுதி

டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்குச் சென்று வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இரண்டு முதியவர்களுக்கு ஏற்கனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதன்பின் கீழக்கரையைச் சேர்ந்த 71 வயதுடைய தொழிலதிபர் சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 3ஆம் தேதி கீழக்கரை கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அதனையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் 21 பேர் மற்றும் பரமக்குடியில் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

முதல்கட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. ஆனால், இரண்டாம் கட்ட பரிசோதனையில் இறந்த கீழக்கரை தொழிலதிபரின் மனைவி, மகன், பரமக்குடியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஆகிய மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 43 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடந்த நிலையில் 5 பேருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பேசுகையில், “மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் மூன்று பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்களை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். சிவகங்கையில் ஏற்கெனவே கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவரும் இருவரும் நலமுடன் உள்ளனர். அவர்களுக்கு சமீபத்தில் நடந்த பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க: 'ம.பி-யில் தவிக்கும் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்'

ABOUT THE AUTHOR

...view details