ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்றிய அளவில் ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகளின் பட்டியலைத் தயாரித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் நேற்று (பிப். 14) வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியலில் கமுதி தாலுகாவில் உள்ள அரசு ஊழியர்கள், இறந்தவர்கள் பெயர்களும், குடியிருப்புகளே இல்லாத அழிந்துபோன கிராமங்களின் பெயரில் கிளைக் கழகங்கள் உருவாக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து திமுகவினர் கூறியதாவது, திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கடந்தாண்டு மார்ச் மாதம் இறந்தபின்பு கிளைக் கழகத்திற்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றுக்குப் பின் எந்தத் தேர்தலும் நடத்தாமல் கிளைக் கழக நிர்வாகிகளை தலைமை அறிவித்துள்ளது.