ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். நேற்று ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த விக்ரம் என்பவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பிரபல நிறுவனத்தின் குடிநீர் பாட்டிலை வாங்கி உள்ளார். பின்னர் பாட்டிலை திறந்து பார்த்த போது பாட்டிலுக்குள் சிலந்தி ஒன்று இறந்து மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
குடிநீர் பாட்டிலில் சிலந்தி: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் விற்பனை செய்யப்பட்ட குடிநீர் பாட்டிலில் சிலந்தி கிடந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குடிநீர் பாட்டில்
பின்னர் இதுகுறித்து அவர் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிலந்தி இருந்த பாட்டிலை ஆய்வு செய்தனர். மேலும் விற்பனை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமானதா அல்லது போலியாக தயார் செய்த பாட்டிலா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:ஸ்ரீவில்லிபுத்துார் பிளவக்கல் அணையில் செத்து மிதந்த மீன்கள்!