தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்தவிருந்த 80 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருள் மற்றும் 80 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

smuggling theft
smuggling theft

By

Published : Dec 25, 2019, 3:00 PM IST

இலங்கைக்கு கஞ்சா கடத்தவிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் ராமேஸ்வரம் நகர் காவல்துறையின் உதவியுடன் சிவகாமி நகர் பகுதியில் துப்பாக்கி ராஜா என்பவரின் தோட்டத்தின் அருகே மறைந்திருந்தனர்.

அப்போது கஞ்சாவை கடல் வழியாக கடத்த காரில் கடற்கரைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது தனிப்படையினர் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த துப்பாக்கி ராஜா, ரமேஷ் ஆகிய இருவரையும் பிடித்தனர். அவர்களை சோதனை செய்ததில் இலங்கைக்கு கடத்துவதற்காக சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 பண்டல்களில் சுமார் 80 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த சிறப்பு தனிபடையினர், கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தனிப்படையினரின் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவலையடுத்து, ராமேஸ்வரம் கடல் வழியாக போதை பொருள்கள், கடல் அட்டை, பீடி இலைகள் ஆகியவைகளை இலங்கைக்கு கடத்திவரும் சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ராமேஸ்வரத்தை சேர்ந்த செல்வகுமாரை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: வாக்காளர்களுக்கு மூக்குக் கண்ணாடி அணிவித்து பரப்புரை - தேர்தலில் வெல்ல பலே திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details