ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடல் சீற்றத்துடன் காணப்படும் ராமேஸ்வரம் - மீனவர்கள் அச்சம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
Rameswaram seen with sea rage
தனுஷ்கோடி துறைமுகத்தில் கடல் அலைகள் 30 அடி வரை எழுகிறது. நேற்று (செப்.21) கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல இருந்த ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் பலத்த சூறைக்காற்று, கடல் சீற்றத்தினால் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 1500க்கும் மேற்பட்ட படகுகள் மண்டபம், ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பலத்த காற்று காரணமாக மணல் அதிகளவில் கிளம்புவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.