கரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு கரோனா தொற்று முற்றிலும் இல்லாத நகராட்சியாக ராமேஸ்வரம் தற்போது உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துப் பேசிய ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் வீ.ராமர் ”ராமேஸ்வரம் நகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளில் நகராட்சி ஊழியா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், ராமேஸ்வரத்துக்கு வரும் பக்தா்களும் சுற்றுலாப் பயணிகளும் நகராட்சி எல்லையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தற்போது கரோனா இரண்டாவது அலையில் 241 போ் தொற்றுக்கு உள்ளாகினா். இதில் எட்டு போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மீதுமுள்ள 233 போ் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனா்.