ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த முறை 35 நாட்களுக்கு பிறகு நேற்று கோயில் உண்டியல், கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் திறக்கப்பட்டது.
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி!
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் இருக்கும் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.
ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி!
இதனையடுத்து உண்டியலில் இருக்கும் காணிக்கையை எண்ணும் பணியில் மக்கள், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மொத்தம் உண்டியலில் 69,90,953 ரூபாயும் , 103 கிராம் தங்கமும், 2.757 கிராம் வெள்ளியும், 198 வெளிநாட்டு நோட்டுக்களும் இருந்தன.