தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்காலிக காய்கறி சந்தையாக மாறிய ராமநாதபுரம் பேருந்து நிலையம்

மக்கள் சந்தைகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க ராமநாதபுரம் அரசு பேருந்து நிலையம் தற்காலிக சந்தையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ற்காலிக காய்கறி சந்தையாக மாறிய ராமநாதபுரம் பேருந்து நிலையம்
ற்காலிக காய்கறி சந்தையாக மாறிய ராமநாதபுரம் பேருந்து நிலையம்

By

Published : May 10, 2021, 9:33 PM IST

ராமநாதபுரம் : தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவுகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் இன்று முதல் மே 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நாள்களில் காய்கறி,இறைச்சி, தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரையிலும் உணவகங்கள் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுதுவரை 1288 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மக்கள் சந்தைகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கில் தற்காலிக சந்தைகளை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

அதன்படி அம்மா பூங்கா அருகே ஒரு தற்காலிக சந்தையையும் ராமநாதபுரம் அரசு பேருந்து நிலையத்தில் மற்றொரு சந்தையும் அமைந்துள்ளது.

இது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், தற்காலிக சந்தை மூலம் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டமாய் கூடுவதை தவிர்த்து அந்தந்த பகுதிகளில் பொருட்களை வாங்கிச் செல்வார்கள், தொடர்ந்து நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அதிமுக எம்.பி.க்கள் இருவர் ராஜினாமா

ABOUT THE AUTHOR

...view details