தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 16, 2021, 2:33 PM IST

ETV Bharat / state

நகராட்சியை கண்டித்து சாலையில் செடி நடும் நூதன போராட்டம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பகுதியில் சாலைகளை பராமரிக்காத நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழை மரக்கன்று நடும் நூதன போராட்டம் நடத்தினர்.

நகராட்சியை கண்டித்து சாலையில் செடி நடும் நூதன போராட்டம்
நகராட்சியை கண்டித்து சாலையில் செடி நடும் நூதன போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதற்கு முன்பிருந்தே சாலைகள் சேதமடைந்த நிலையில், தற்போது பெய்த கனமழையின் காரணமாக மேலும் சேதமடைந்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தங்கச்சிமடம் வலசை தெரு அருகில் மழை நீர் தேங்கி இருந்த சாலையில் வாழைமர கன்று, பூ, செடி உள்ளிட்டவற்றை நாற்று நடுவது போல நாற்று நடும் நூதன போராட்டத்தை நடத்தினர்.

நகராட்சியை கண்டித்து சாலையில் செடி நடும் நூதன போராட்டம்

மேலும் சாலைகளை பராமரிக்காமல் உள்ள நகராட்சியை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்துள்ள சாலைகள் அனைத்தையும் சீர் செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

கருப்புக்கொடி கட்டி கச்சத்தீவு நோக்கி செல்லும் போராட்டம்: ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details