தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் விதமாக, ஒன்றன்பின் ஒன்றாக சில அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் 50 விழுக்காடுப் பேருந்துகள், 60 விழுக்காடுப் பயணிகளுடன் சேவையைத் தொடங்கும் எனும் அறிவிப்பை அரசு வெளியிட்டது.
அதிலும் குறிப்பாக மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்து இயக்கப்படும், ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
மேலும் ராமநாதபுரத்தைப் பொறுத்தவரை, மொத்தமாக நகரம் மற்றும் புறநகர்ப் பேருந்துகள் என 323 பேருந்துகள் இயங்கி வருகின்றன.
தகுந்த இடைவெளியில்லாமல் பயணித்த மக்கள் இதில் 50 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயங்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருந்த நிலையில், 128 புற நகர்ப் பேருந்துகள் மற்றும் 66 நகரப் பேருந்துகள் இன்று காலை முதல் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் அரண்மனையிலிருந்து, பெரியபட்டினம் வரை செல்லும் 4 F என்ற பேருந்தில் அரசு கூறிய படி, ஒரு சீட்டுக்கு ஒருவர் என்ற தகுந்த இடைவெளியைக் காற்றில் பறக்க விடும் விதமாக அனைத்துச் சீட்டுக்களிலும் பயணிகள் அமர்ந்திருந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் நின்றபடி பேருந்தில் பயணம் செய்து வந்தனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை சற்றும் பின்பற்றாமல் ராமநாதபுரத்தில் இதுபோன்ற செயல் நடந்துள்ளது.
இதையும் படிங்க:அடுத்த கோயம்பேடாக மாறும் அபாயத்தில் காசிமேடு?