தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எரிவாயு குழாய்க்கு மக்கள் எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ராமநாதபுரம்: வழுதூர் பகுதியில் எரிவாயு குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், குடியிருப்புப் பகுதி அல்லாமல் மாற்று பாதையில் கொண்டு செல்ல மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்
ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்

By

Published : Jan 12, 2021, 12:54 PM IST

தனியாருக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர், வாலாந்தரவை, தெற்கு காட்டூர், திருப்புல்லாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின் உற்பத்தி திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இதன் அருகில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எரிவாயு சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராம பகுதிகளிலிருந்து இயற்கை எரிவாயுவை வழுதூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு வாலாந்தரவை ஊராட்சியில் எட்டு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்தால் தங்களது விவசாய நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், இங்கு செயல்படும் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கு மற்றும் மின் உற்பத்தி நிலையங்களால் மழை பெய்வதுகூட தடுக்கப்பட்டு கடும் வறட்சி நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்

இது குறித்து கடந்த காலங்களில் சாயல்குடி, ராமநாதபுரத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டங்களிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் கிடப்பில் போடப்பட்ட குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியதால் கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: வேளாளர் பொதுப்பெயரில் மாற்று சமுதாயத்தினரைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டி!

ABOUT THE AUTHOR

...view details