தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 26, 2019, 7:40 PM IST

ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

ராமநாதபுரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு துறையில் முக்கியக் கோரிக்கையான 37 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்துவிட்டு, காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதேபோல், கன்னியாகுமரியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

திருப்பூரிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: விறகு அடுப்பில் சத்துணவு சமைத்த பள்ளிப் பணியாட்களைக் கண்டித்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details