தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ராமநாதபுரத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு இல்லை’ - மருத்துவக்கல்லூரி முதல்வர் அல்லி தகவல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு இல்லை என மருத்துவக்கல்லூரி முதல்வர் அல்லி தெரிவித்துள்ளார்.

மருத்துக்கல்லூரி முதல்வர் அல்லி
மருத்துக்கல்லூரி முதல்வர் அல்லி

By

Published : May 24, 2021, 7:37 PM IST

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது கருப்பு பூஞ்சை எனும் நோய்த் தொற்றும் அதிகளவில் பரவி மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகின்றது. நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை தொற்றால் 5 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அச்சத்தை போக்கவும் சுகாதாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு குறித்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லி செய்தியாளர்களிடத்தில் பேசினார். அப்போது,“ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் யாருக்கும் "மியூகோர்மைகோசிஸ்" எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இல்லை. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்டீராய்டு மருந்து எடுத்து கொண்டவர்கள், தீவிர நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு பாதிப்பு அதிகளவில் இருந்தால் மருத்துவ கவுன்சில் வழிகாட்டியபடி ஸ்டீராய்டு மருந்துகள் மூலமே சிகிச்சை அளிக்கப்படும். எனவே, ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொண்டவர்கள் அனைவருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று வரும் எனக் கூற முடியாது. இந்தக் கருப்பு பூஞ்சை நோய் எளிதில் குணப்படுத்தக்கூடியது. யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அரசின் வழிகாட்டுதலின்படி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளோம்.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் யாரும் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதால் யாரும் அச்சமடையத் தேவையில்லை. கரோனா தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பெறுவோர், நீரிழிவு நோயாளிகள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

மாவட்டத்தில் யாருக்காவது கண் சிவப்பது, கண்ணில் நீர்வடிதல், அசைவு குறைதல், கண்களை சுற்றிலும் கருமை நிறமாதல், மூக்கில் கருப்பு திரவம் வடிதல், அடிக்கடி காய்ச்சல், கண்வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகும் லாரி!

ABOUT THE AUTHOR

...view details