தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்: குடிசைகள் சேதம்!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல குடிசைகள் சேதமடைந்தன.

ராமேஸ்வரம் மீனவர்கள்
தனுஷ்கோடியில் கடல் சீற்றல்

By

Published : Aug 8, 2020, 4:54 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவு மன்னார்வளைகுடா கடலில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் தனுஷ்கோடி, அரிச்சல்முனை தென் கடலில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் ஆக்ரோசமாக சீறிப்பாயும் கடல் அலைகள் எம்.ஆர் சத்திரம் ஜெட்டி பாலத்தின் மீது மோதி பல அடி உயரம் எழுகிறது.

தொடர் சூறைக்காற்றால் கடல் பெருக்கு ஏற்பட்டு தென்கடல் பகுதியில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு 5 அடி உயரமும் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடற்கரை ஓரங்களில் உள்ள ஏராளமான குடிசைகள் காற்றில் சேதமடைந்து கீழே விழுந்தது. இந்நிலையில், இன்று (ஆக.8) காலை எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் பெரிய இரும்பு மிதவை உருளை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை, கடலோர காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details